
கடலூர்: பெரியகுப்பம் பகுதியில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொள்ளை அடிப்பதற்காக 20 பேர் திட்டமிட்டு வந்தனர். அவர்கள் வருவதாக தகவல் கிடைத்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தனர்.அப்போது சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 3 பெட்ரோல் குண்டுகள் மட்டுமே வெடித்தது.3 பெட்ரோல் குண்டுகள் மட்டுமே வெடித்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.