சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!ஐ

சென்னை: சமூக வலைதளங்களில் தவறானதகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுடிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

சென்னை புத்தகக் காட்சியில் நேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, கண்காட்சியைப் பார்வையிட்டு, சில புத்தகங்களை வாங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாம் கேட்கக்கூடிய செய்திகள் மற்றும் பார்க்கக்கூடிய காட்சிகளில் எது உண்மை என்பதைஅறிந்துகொள்ள, நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான், நம்மால் தெளிவான முடிவு எடுக்க முடியும்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி பலரிடம் பணத்தைவாங்கிக் கொண்டு ஏமாற்றுகின்றனர். உண்மையை உணராத மக்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். அவற்றையும் சிலர் உண்மை என்றே நம்புகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிரமாக ஈடுபடுவோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர்தான் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்.

இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவோரை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *