சமூக நீதி ஆட்சி என்று கூறிக் கொள்ளும் தமிழகத்தில் தீண்டாமை; 20 ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடியேற்ற முடியாத அவலம்.? கள ஆய்வு வெளியிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி: நடவடிக்கை எடுக்குமா அரசு.?

சென்னை: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) பத்திரிகைகள் சந்திப்பில் நேற்று 11ஆகஸ்22 வியாழக்கிழமை அறிக்கையை ஒன்றை வெளியிட்டது. தமிழ்நாட்டில் 20 ஊராட்சிகளில் கடந்த ஆண்டு தேசியக்கொடியை சாதியப்பாகுப்பாட்டினால் ஏற்ற முடியாத நிலை இருந்தது எனவும், அந்த ஊராட்சிகளில் நடப்பாண்டிலும் தேசியக்கொடியை ஆகஸ்ட் 15 ல் ஏற்றுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை எனவும், தேசியக்கொடியை சாதியப்பாகுப்பாட்டால் ஏற்ற முடியாத நிலை உருவாகும் ஊராட்சிகளில் ஆகஸ்ட் 16ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தாலும் தேசியக்கொடியை ஏற்றும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றமுடியாத நிலை.?

இதுகுறித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறியதாவது, ”தமிழ்நாட்டில் கிராம ஊராட்சித்தலைவர்களில் சிலர் சாதியப் பாகுபாடுகளின் காரணமாக தேசியக்கொடியை ஏற்றிட முடியவில்லை. தலைவர்களில் சிலர் தரையில் அமர வைக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டப் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் ஆங்காங்கே சாதிய ரீதியிலான சவால்களை எதிர்கொண்டனர். இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் எதிர் கொள்ளும் சாதிய ரீதியான சவால்கள் பற்றிய கள ஆய்வை மேற்கொண்டது. தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில், பயிற்சி அளிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு கள ஆய்வு நடைபெற்றது.

வரும் ஆகஸ்ட் 15 ல் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக்கொண்டாட இருக்கும் வேளையில் அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஊராட்சி அரசாங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதித்தலைவர்கள் நிர்வாகம் செய்ய முடியாத அளவுக்கு சாதிரீதியான சவால்களை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.தமிழ்நாட்டில் 20 கிராம ஊராட்சிகளில் கடந்த ஆண்டு சுதந்திரத் தினத்தில் தேசியக்கொடியை பட்டிலினத்தைச்சார்ந்த தலைவர்கள் ஏற்ற முடியாத நிலைமை இருந்தது. ஆனால், அதேநிலைமை நடப்பாண்டிலும் ஏற்படக்கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பட்டியலினத்தலைவர் சுதா தேசியக்கொடியை ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாகப்புகார் அளித்தால், சின்னசேலம் வட்டாட்சியர் சமாதானக்கூட்டம் நடத்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் தேசியக் கொடியை ஏற்றுவார் என அறிவித்துள்ளார்.

அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும்.தொடரும் சாதிய அவலங்கள்: மேலும், 42 ஊராட்சிகளில் பட்டியலினத்தலைவர் பெயரைக்கூட பெயர்ப்பலகையில் எழுதாமல் உள்ளனர். இதற்கு உரிய வட்டாட்சியர், ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எந்தவிதமிரட்டலோ, பாகுபாடோ இல்லாமல் தேசியக்கொடி ஏற்றுகிற ஜனநாயக உரிமையை உறுதி செய்திட வேண்டும்.

பட்டியலின ஊராட்சித்தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றமுடியாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உதவும்! சாதியப் பாகுபாடுகளால் தேசியக் கொடி ஏற்றாத ஊராட்சிகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏற்றும் என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சாதிய தீண்டாமையினால் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாப்பளித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தேசிய கொடியை ஏற்றுவதற்கு உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *