சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு; மேலும் காங்கிரஸ், திமுக, மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று நம்பிக்கை.!

மார்க்சிய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னெடுத்துள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக, ஆா்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாா் அமைப்புகள் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன குற்றம்சாட்டியிருந்தன.மேலும் மதரீதியில் மக்களை பிளவுபடுத்தும் சங்பரிவாா்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு அவற்றை முறியடிக்கும் விதமாக காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக். 2 அன்று மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவித்திருந்தன.இந்நிலையில் இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்வதாக பல்வேறு சமூக இயக்கங்களும் அறிவித்துள்ளன.இதுவரை மே17 இயக்கம், மனிதநேயமக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு, எஸ்டிபிஐ, டிசம்பர் 3 இயக்கம், தமிழர் விடியல் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை), இந்திய தவ்ஹீத் ஜமாஅத், திராவிடர் கழகம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.மேலும் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *