
மும்பை: மராட்டியத்தின் மும்பை நகரை சேர்ந்த பெண் யாஸ்மின் ஷேக். இவரது தாயார் துபாய் நாட்டுக்கு சமையல் பணிக்காக சென்றுள்ளார். அதன்பின் அவர் நாடு திரும்பவேயில்லை.இதுபற்றி யாஸ்மின் கூறும்போது, எனது தாயார் ஹமீதா பானு கத்தார் நாட்டுக்கு வேலைக்காக 2 முதல் 4 ஆண்டுகள் வரை செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை ஏஜெண்டு உதவியுடன் சென்ற அவர் திரும்பி வரவேயில்லை.அவரை பல இடங்களில் தேடி கண்டுபிடிக்க முயற்சித்தோம். ஆனால், எங்களது அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. எங்களிடம் சான்றுகள் இல்லாத சூழலில் புகார் கூட அளிக்க முடியவில்லை என வருத்தமுடன் கூறியுள்ளார்.அந்த பெண் ஏஜெண்டிடம் எனது தாயாரை பற்றி கேட்கும்போதெல்லாம், எங்களிடம் பேசவோ அல்லது சந்திக்கவோ அவர் விரும்பவில்லை என கூறுகிறார். ஆனால், அவர் நலமுடன் உள்ளார் என கூறுவார். அதன்பின் அந்த ஏஜெண்டையும் காணவில்லை. அவரை எங்களால் அணுக முடியாத சூழலில் தாயாரை கண்டறிவது சிக்கலானது.இந்த நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு ஒரு சமூக ஊடக கணக்கின் உதவியுடனேயே எனது தாயாரை பற்றிய விவரம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் எங்களுக்கு தெரிய வந்தது என யாஸ்மின் கூறுகிறார். அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அரசு உதவ வேண்டும் என யாஸ்மின் வலியுறுத்தி உள்ளார்.
I needed to thank you for this good read!! I definitely loved every bit of it. I have you book marked to check out new things you postÖ