
உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலின் அடுத்ததடுத்த கட்ட தேர்தலைமுன்னிட்டு அம்மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வரும் வேளையில் பகுஜன் சமாஜ்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி சமாஜவாதிக் கட்சியினை சாடியுள்ளார்.இன்று லக்னௌவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மாயாவதி.

‘சமாஜவாதி ஆட்சியில் குண்டர்கள், குற்றவாளிகள்,கலவரக்காரர்கள் மற்றும் சமூகவிரோதிகள் பலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வளர்ச்சிப் பணிகள் கூட சிலபகுதிகள்மற்றும் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே செய்யப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.மேலும் அவர் உரையில் ‘உத்தரப் பிரதேசத்தில்சமாஜவாதி மற்றும் பாஜகவை ஆளவிடக் கூடாது.

பாஜக அரசு சாதிய, முதலாளித்துவக் கொள்கைகள் மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் குறுகிய எண்ணம் கொண்ட செயல்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. இங்குமதத்தால் வெறுப்பு மற்றும்பதற்றமான சூழலே உள்ளது’ எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural news என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.