சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு; காவல்துறை குவிப்பு.!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கட்சியின் தலமையிடம் சென்னையில் இயங்கி வருகிறது இந்த நிலையில் இன்று கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுவதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இரு தரப்பினர் உருட்டைக் கட்டையால் தாக்கிக் கொண்டதில் சிலருக்கு மண்டை உடைந்தது காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் அசம்பாவிதம் நடக்கமல் இருக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கரணம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் இரு தரப்பினர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்சத்தியமூர்த்தி பவனில் பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *