சண்டிகர் மாணவிகளின் வீடியோ இணையத்தில் பகிர்ந்ததில் போராட்டம் வெடித்ததால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர், தனது தோழிகள் குளிக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை அறிந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்ததுடன், சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

வீடியோவை இணையத்தில் கசிய விட்டதை கண்டித்து பல்கலை கழக வளாகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

உடனடியாக விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகள் தவறான முடிவுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதுடன், வீடியோவை வெளியிட்ட மாணவியை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் விசாரித்து வருவதாகவும், மாணவிகள் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், அதிர்ச்சியால் மயங்கிய மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பேசிய மாநில அமைச்சர்கள், மாணவ, மாணவிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றவுணர்வு கொள்ள வேண்டாம் என ஆறுதல் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *