
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது சண்டிகர் பல்கலைக்கழகம். இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு சுமார் 60 மாணவிகளின் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. பல்கலைக்கழக விடுதி குளியல் அறையில், ரகசிய கேமரா வைத்து மாணவிகள் குளிப்பதை படம்பிடித்தது தெரியவந்தது. இந்த வீடியோக்கள் வெளியான அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் 8 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட பெண் சட்டவிரோதமாக நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை சிம்லாவில் உள்ள ஒரு ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். இதன் விளைவாக அந்த வீடியோக்கள் இணையத்தளத்தில் பரவியதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளில் 8 பேர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அதை போலீசார் மற்றும் பல்கலைக்கழகம் தரப்பில் மறுத்தனர். மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பஞ்சாப் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் யார் என்றும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.