
திரிபுரா: திரிபுராவில் மாணிக் சஹா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்று மாநில தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னைகளை எடுத்து வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதி இரண்டாவது நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி கோரிக்கைகளை முன்வைத்து கொண்டிருந்தனர். அந்த வேளையில் பாஜக-வின் சட்டமன்ற உறுப்பினர் ஜதப் லால் நாத் என்பவர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே தன்னுடைய கைபேசியில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தாகவும் ஆபாச படம் பார்ப்பது , யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் அவ்வப்போது சட்ட மன்ற கூட்டத்தொடரையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பாஜக எம்.எல்.ஏவுக்கு வலுத்த கண்டனங்கள் குவிந்து வருகிறது.
மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய சட்டமன்ற கூட்டத்தொடரில் வைத்து இவ்வாறு நடந்துகொள்வது மிக மோசமான வெக்கக்கேடான செயல் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் பாஜக தலைமையிலான திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், முதலில் ஜதப் லால் நாத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்படும். என்றும் உறுதி அளித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.