சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.!

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராமப்புற வீடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக உலகுடையாம்பட்டை சேர்ந்த மக்கள் புகார் மனு அளித்தனர். அது குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து அந்த புகார் தொடர்பாக குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். அப்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, உதவி திட்ட அலுவலர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், ஒன்றிய பொறியாளர்கள் அருண் பிரசாந்த், சபான்கான் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *