
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை ஊராட்சிக்குட்பட்ட பாவளம் கிராமத்தில் ஐ.ஐ718 பூட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிராம அங்காடி D.P.14 முதலாவது கடையில் மேல் கூரை உடைந்து கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி நியாயவிலைக்கடையின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது,தொடர்ந்து இந்த நியாய விலை கடையில் கிராம மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இதனால் நியாயவிலை கடையின் சுவர்களும் மேற்கூரைகளும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் புதிய நியாய விலை கடை அமைக்க பலமுறை மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதிய நியாய விலை கடை அமைக்காமல் பஞ்சாயத்துக்குட்பட்ட தனியார் கட்டிடத்தில் நியாய விலை கடை இயங்கி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய நியாயவிலை கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.