கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சாதி இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க. நிர்வாகி; சமூக வலைதளங்களில் கண்டனம் தொடர்ந்து கொண்டு வந்ததால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் கைது.!

சேலம்: திருமலைகிரி என்னும் கிராம் சேலம் மாவட்டத்தில் உள்ளது இந்த கிராமத்தில் இருந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஆபாசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் உள்ள கோவிலில் தற்போது திருவிழாவும் கும்பாபிஷேகமும் நடந்து வருகிறது. இந்த நிலையில், கோவில் கும்பாபிஷேகம் முடிந்து வேறு பூஜைகள் நடைபெற்று வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரவீன் என்பவர் கோவிலுக்குள் வழிபடச் சென்றிருக்கிறார். இதன் காரணமாக தாங்கள் அந்தக் கோவிலுக்குள் வரமாட்டோம் என அங்குள்ள ஆதிக்க ஜாதியினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட திருமலைகிரி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கடந்த ஜனவரி 27ஆம் தேதி அந்தப் பட்டியலின இளைஞரை ஊர் மக்கள் முன்பாக ஆபாசமாகத் திட்டினார். “யாரு சொல்லிடா கோவிலுக்குள்ள வந்த? சொல்றா. ஊர்லயே இருக்க முடியாது, ஞாபகம் வச்சுக்க… பு… ஊர் நல்லா இருக்கனும்னு விடிய விடிய தூங்காம உக்காந்துக்கிட்டிருக்கிறேன்… இங்க நோம்பு போடலைனா உங்க ஊர்லையும் போட முடியாது. அப்படியே பேத்துப்புடுவேன்.. இத்தனை பேருக்குத் தெரியாததை நீ சொல்றியா… எங்க ஊர்ல பாதிப்பேர் கோவிலுக்கே வர மாட்டேங்கிறான். கோவிலே வேணாங்கிறான்… இந்தக் கோவிலைக் கட்ட ஒங்க ஆயாலும் அப்பனும் பணக் கொடுத்தாங்களா…? பல்லு கில்லெல்லாம் கழட்டிப்புடுவேன். யாரு சொல்லி இதைக் கேக்குறாங்கன்னு சொன்னா, பேத்துப்புடுவேன். ரோட்டுல எங்கையும் நடமாட முடியாது.” என்று பேசிய மாணிக்கம், தனது பேச்சின் நடுவே அந்த இளைஞரையும் அவரது உறவினர்களையும் மிக மோசமான கெட்ட வார்த்தைகளாலும் திட்டி தீர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்த நிலையில் பேஸ்புக் வாட்ஸ் அப் டிப்பர் போன்ற சமூக வலைதளங்களில் தீண்டாமை தமிழ்நாடு திராவிட மாடல் இதுதானா போன்ற கண்டனங்கள் வளர்த்து வந்த நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *