கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறைதண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!!

மதுரை: கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் முதலாவது குற்றவாளி யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல், ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *