கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி.!

கொலம்பியாவில் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதிக்கு உட்பட்ட அப்ரியாக்கி நகராட்சி பகுதியில் கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.இதையடுத்து கொலம்பியாவில் மலைப்பாங்கான நிலப்பரப்பு, அடிக்கடி பெய்யும் கனமழை மற்றும் மோசமான அல்லது முறைசாரா வீடுகளின் கட்டுமானம் காரணமாக நிலச்சரிவுகள் பொதுவானவை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.இதுபோலவே கடந்த மார்ச் 16 ஆம் தேதி மழைக்கால சூழலால் நாடு முழுவதும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது என்று பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி பெரேரா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.கடந்த 2017 ஆம் ஆண்டு தெற்கு நகரமான மொகோவா பெருநகரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 254 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *