
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நகரைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரான இவர், சம்பவத்தன்று மற்றொரு சமூகத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான தோப்பில் இருந்து ஒரு கொய்யாப்பழத்தை பறித்து சாப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த தோட்டக்காரர்களான பீம்சென் மற்றும் பன்வாரிலால் ஆகிய இருவரும் சேர்ந்து ஓம்பிரகாஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து மயக்கமான ஓம்பிரகாஷை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓம்பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஓம்பிரகாஷின் சகோதரர் சத்யபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், பழத்தோட்டத்தில் கொய்யாப்பழம் பறித்த ஓம் பிரகாஷை, கட்டைகளால் அடித்துக் கொன்றதாக பீம்சென், பன்வாரிலால் ஆகிய இருவரைக் கைதுசெய்து. குற்றம்சாட்டப்பட்ட இருவர்மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 302 (கொலை) மற்றும் SC/ST சட்டத்தின் 3(2)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறது.