
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த அடிப்படையில் 13 ஆண்டு காலம் பணி செய்து வந்த 56 தொழிலாளர்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கமல் திடிரென கடந்த அக்டோபர் 01ம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் இதனை தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் மற்றும் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனிடையே சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்காததால் 16வது நாளாக சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் 16 அக்டோபர் 22 இன்று கொட்டும் மழையிலும் தங்களுக்கு வேலை கொடு என்று கோஷங்களுடன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு