
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 20 நாட்களில் 160,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டெங்கி, சளிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் காய்ச்சலுக்கு 68 பேர் பலியாகி உள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இதனால் படுக்கைப் பற்றாக்குறையும் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதகரிப்பதால் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான சவால் ஏற்பட்டுள்ளது.
116 பேருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கேரள சுகாதாரத்துறை கூறியது. இதில் 77 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டா, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பருவமழை துவங்கியதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.