
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே காவல்துறையினரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவற்றை கைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை காவல்துறை கண்டுபிடித்து. இதில் முக்கிய குற்றவாளி ஒருவர் மராட்டியத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர் வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.