
கடலூர்: குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் அப்போதைய தொகுதி பொதுச் செயலாளர் ராஜ்மோகன் திருமணத்தை பௌத்த முறையில் நடத்தி வைத்துவிட்டு அதே பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சியில் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 13-05-2018 ல் கலந்து கொண்ட பொழுது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் மண்ணேரிக்கரையில் 21 குடும்பங்கள் வீட்டுமனை இல்லாமல் நீண்ட நாட்களாக ஏரிக்கரையில் குடும்பம் இருப்பதாகவும், மழைக் காலங்களில் மிகவும் அவதிப்படுவதாகவும் எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தார்கள். உடனே இதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என கட்சியின் மாவட்ட நிர்வாகத்திடம் நமது மாநிலத் தலைவர் அவர்கள் ஆணையிட்டார்கள்.

மாநில தலைவரின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்முருகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பகுஜன் சமாஜ் கட்சியின் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ச.ஜெயபிரகாஷ் அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக அவரோடு ஒன்றிய பொருளாளர் அ.ரவி, தொகுதி மாவட்ட செயலாளர் தன.வேலாயுதம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஜோதிமுருகன் ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து தொடர்ந்து வீட்டுமனை பட்டா வேண்டி வலியுறுத்தியதன் அடிப்படையில் 29-09-2022 இன்று நடந்த அரசு விழா ஒன்றில் 21 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா அரங்கமங்கலம் கிராமம் அருகே வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருக்கும் எங்களுக்காக பல்வேறு சட்ட போராட்டம் நடத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர்.