
குஜராத்: இந்திய நாட்டில் ஒவ்வொரு நாளும் தீண்டாமை என்பது ஒவ்வொரு விதமாக தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நடைபெற்று வருகிறது அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 03ம் தேதி நடந்ததுள்ளது. ஜாதிய ஆணவத்தால் குஜராத் இளைஞர்கள் செய்த ஓர் தீண்டாமை கொடூரமான சம்பவம். குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த கிரிக்கெட் போட்டியில் கிராமத்தில் இருந்து பலரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது அங்கே ஆர்வமாக கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் அந்த பந்தை ஒடி வந்து எடுத்துள்ளான். சிறுவன் பந்தை எடுத்ததால் ஆத்திரமடைந்த சிலர் அந்த சிறுவனைச் சுற்றி வளைத்து மிரட்டியுள்ளனர். திடீரென இத்தனை பேர் சுற்றி வளைத்து மிரட்டியதால் அந்த சிறுவன் மிகவும் அச்சம் அடைந்து இருந்திருக்கிறான். குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ககோஷி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனைக் கீழ்த்தரமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் மிரட்டியுள்ளனர்.
மேலும், சாதியை குறிப்பிட்டும் மிக மோசமான நிலையில் திட்டியுள்ளார். இதனால் அந்த சிறுவன் பயந்தே விட்டான். அப்போது அங்கே இருந்த சிறுவனின் மாமா தீரஜ் பர்மர் என்பவர் சாதியை குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பிரச்சினையை அப்போது அப்படியே முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, அன்று மாலையே சாதிய ஆணவத்தால் இளைஞர்கள் 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் தீராஜ் மற்றும் அவரது சகோதரர் கீர்த்தி ஆகியோரை தாக்கியுள்ளனர்.
அத்துடன் நிற்காமல் அவர்களில் ஒருவர் கீர்த்தியின் கட்டை விரலைத் துண்டித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தீராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 07 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.