குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு “டெல்லி, பஞ்சாப் மக்களைப் போல எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள்..!

ஆம் ஆத்மி பஞ்சாப்பில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத்தின் மீது தனது கவனத்தை திருப்பியிருக்கிறது.குஜராத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றவர்கள் அங்கு சாலையோர பேரணியில் பங்கேற்றார்கள். அதன்பிறகு இருவரும், ஆசிரமத்தில் உள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர். டெல்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “குஜராத்தில் 25 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியிலிருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. நான் எந்தக் கட்சியையும் விமர்சிக்க இங்கு வரவில்லை. பா.ஜ.க-வையோ, காங்கிரஸையோ தோற்கடிக்க வரவில்லை. குஜராத்தை வெல்ல வந்திருக்கிறேன். குஜராத்தில் ஊழல் முடிவுக்கு வர வேண்டும். பஞ்சாப் மற்றும் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது போல, குஜராத்திலும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.அவரைத் தொடர்ந்து பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “நான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தேசமான பஞ்சாப்பில் இருந்து வருகிறேன். நான் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற பிறகு குஜராத்துக்கு முதல் முறையாக வருகிறேன். நாங்கள் தேசியவாதிகள், தேசத்தை நேசிக்கிறோம். ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *