
காஞ்சிபுரம்: ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் நேற்று முன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியதில் ஊழியர்கள் தீக்காயங்களுடன் அலறியடுத்து வெளியே ஓடினர். குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியதால், தகவல் அறிந்து குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32), நிவேதா (21), தமிழரசன் (18), ஜீவானந்தம், சண்முகபிரியன், ஆமோத்குமார் ஆகிய 12 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தீக்காயம் அடைந்த ஆமோத்குமார் (25) என்ற பீகார் மாநில வாலிபர் மற்றும் 21 வயது இளம்பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று இருவரும் இன்று ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தீக்காயம் அடைந்த பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கியாஸ் சிலிண்டர் குடோன் வெடி விபத்து தொடர்பாக தேவரியம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் (54), சாந்தி (48), ஜீவானந்தம் (46), மோகன்ராஜ் (38) பொன்னிவளவன் (45), ஆகிய 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இது வரை மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் கேஸ் ஏஜன்சி உரிமையாளர் இடம் இருந்து தலா 20லட்சம் பெற்று தரவேண்டும் என்றும் அது மட்டும் இன்றி பகுஜன் சமாஜ் கட்சி முக்கிய கோரிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கேஸ் ஏஜன்சி அலுவலகம் மற்றும் குடோன்கள் அனுமதி பெற்று இயங்குகிறதா என்றும் பாதுகாப்பான நிலையில் தான் உள்ளதா என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கேஸ் ஏஜன்சி இடங்களில் ஆய்வு செய்து இது போன்ற அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணை தலைவர் ராஜவேல் அவர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.