கிணற்றில் விழுந்த நாய் குட்டியை காப்பாற்ற முயன்றவர் நீரில் மூழ்கி இறந்த சோகம்.!

காட்பாடி: வேலுார் மாவட்டம், காட்பாடி மணவாளமோடு பகுதியை சேர்ந்தவர் வல்லரசு, 45. கட்டட தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகில் இருந்த பாழடைந்த 400 அடி ஆழ கிணற்றில் நாய் குட்டி ஒன்று நேற்று மாலை 5:00 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் நாய் குட்டி விழுந்தது.இதை பார்த்த வல்லரசு கயிறில் வாளியை கட்டி நாயை காப்பாற்ற முயன்றார். அப்போது நிலைதடுமாறி அவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். காட்பாடி தீயணைக்கும் துறையினர் பல மணி நேரம் போராடி கிணற்று நீரை மோட்டார் வைத்து வெளியேற்றி, பாதாள சங்கிலியை கொண்டு வல்லரசு பிணத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து விருதம்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *