
காவல்துறையினர் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான சிறுவன் முஷ்ரப்- இச்சம்பவத்திற்க்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருப்பத்தூர் மாவட்டம் கல்நார்சாம்பட்டியில் கடந்த 18 தேதி அன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியை காணச் சென்ற பெரிய கம்மியம்பட்டு முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்த 19 வயது சிறுவன் முஷ்ரப்பை காவல் துறையினர் கொடூரமாக தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்கின்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிறுவன் முஷ்ரப்பை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயிரிழந்த சிறுவன் முஷ்ரப் குடும்பத்திற்கு இழப்பீடு ரூ 20 லட்சம் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
சிறுவன் முஷ்ரப்பை மிகவும் கொடூரமான முறையில் கொலை வெறி தாக்குதல் நடத்தி உயிரிழப்பிற்க்கு காரணமான பெருமாள் என்கிற காவல் துறை அதிகாரி மீது எந்த வித பாரபட்சம் பார்க்காமல் கொலை வழக்கு பதிவு மற்றும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.