
சென்னை: கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீரங்களையும் ஆன வியாசர் பாடியை சேர்ந்த தங்கை பிரியா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களின் சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் கூறியவாது:- வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா, ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த மாதம் 20ம் தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காதது ஏன், உலக நாடுகளில் கல்வி, மருத்துவம், இருப்பிடம், போன்ற அடிப்படை தேவைகள் வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு நிராகரித்து வருகிறது மேலும் பிரியா இடத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் அவர் குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு அரசு வேலை கொடுத்து விட்டால் மட்டும் போதுமா அந்த குழந்தையின் உயிரை ஈடு செய்த முடியுமா தொடர்ந்து மாவட்ட மாநில அளவில் தேர்வு பதக்கங்களை பெற்று சாதனை படைத்த அந்த மாணவி என்று மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் உயர்ந்தது பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் மேலும் இந்த சம்பவத்தை தமிழக அரசு மெத்தனம் காட்டியும் கண் துறப்பிற்காக இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இதனை மறுபரிசலனை செய்து தமிழக அரசு தவறான மருத்துவ சிகிச்சையால் உயர்ந்த மாணவி மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் போன்ற பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் பவானிஇளவேனில் கேள்வி எழுப்பினார்.