
புதுடில்லி: தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு தினத்தில், அஞ்சலிசிங் என்ற 20வயது இளம் பெண் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஒரு கார் மோதியது. இதில் கீழே விழுந்த அந்த இளம் பெண், அந்த காரில் சிக்கினார். காரில் குடிபோதையில் இருந்தவர்கள், 13 கி.மீ.., துாரத்துக்கு அந்தப் பெண்ணை இழுத்துச் சென்றனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லி காவற்துறையினர் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுனர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் சிறப்பு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கைள் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டில்லி காவல்துறை 117 சாட்சியங்களை விசாரித்து 800 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.