
தூத்துக்குடி: காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை விட்டில் பல குடும்பங்கள் வசித்து வரும் இந்த நிலையில் வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ஆண்டு தோறும் வீட்டின் வாடகை ஏற்றி கூடுதலாக பணம் வசூலித்து வருகின்றனர் . இதனால் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை மக்கள் மாதம் மாதம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பல குடும்பங்கள் மிகவும் வாழ்வாதாரம் பாதிக்க பட்டு வருகின்றனர். ஆகவே சொந்தமாக நிலம் மற்றும் வீடு இல்லாமல் வாடகை விட்டில் வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டி தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. ஏழை எளிய மக்கள் பிரசவம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பெற இரவு நேரங்களில் அரசு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்காமல் திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பெரிய அரசு மருத்துவ மனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர் . இதனால் கர்பினி பெண்கள் மற்றும் பிர நோயாளிகள் மிகவும் சிரமம் படுகின்றனர் ஆகவே பிரசவம் மற்றும் நோயாளிகள் அவசர மருத்துவ சிகிச்சை பெற அனைத்து விதமான கருவிகள் மற்றும் 24 மணி நேரம் பணி செய்ய மருத்துவர்கள் . செவிலியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. ஒரு வழி சாலையில் எதிரும் முதிருமாக வாகனங்கள் செல்கின்றன. மேலும் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிருத்தி வைக்க படுகிறது . இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் பட்டு வருகின்றனர் . வாகன போக்கு வரத்தை சரி செய்யும் வகையில் காலை முதல் மாலை வரையிலும் போக்கு வரத்து காவல் துறையினரை நியமிக்க வேண்டும் . மேலும் இரவு நேரங்களில் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. ஆகவே .இனி வரும் காலங்களில் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க அதிக குற்ற சம்பவங்கள் நடை பெறும் இடங்களில் மற்றும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கண்கானிப்பு கேமேராக்கள் பொருத்த பட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். எனவும் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.