காதலியின் ஆபாச படங்களை Instagram-ல் பதிவிட்ட காதலன்.. விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல் ! தமிழகத்தில் தொடருந்து அரங்கேரும் “சமூக வலைதள” குற்றச் சம்பவங்கள்.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் கோபிநாதன். கல்லூரி மாணவரான இவர் தனது கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் காதலிக்கும்போது, செல்போன் வீடியோ காலில் ஆபாசமாக பேசி பழகி வந்துள்ளனர்.இதை கோபிநாதன் அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் அவரின் வீடியோக்களை ஸ்கிரின்ஷாட் எடுத்துவைத்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் கோபிநாதனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இருப்பினும் அவர் காதலை மீண்டும் தொடங்க விரும்பவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோபிநாதன் அந்த பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட சைபர் கரைம் போலிஸார் கோபிநாதனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *