காஞ்சிபுரத்தில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியாக இறந்த மகனுக்கு முழு உருவ சிலை வைத்து வீட்டில் பெற்றோர் வழிபடும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேதாசலம் நகர் , செல்ல விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாகரன் (80). இவரது மனைவி ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி (75) . இவர்களுக்கு ஹரிஹரன் என்ற மகனும் , சத்யபாமா என்ற மகளும் உள்ளனர்.தனது தந்தை தயாருடன்‌ ஹரிஹரன்(48) அவரது மனைவி வரலட்சுமியுடன் ஒன்றாக வசித்து வருகிறார். கடந்த 2001ல் செவிலிமேடு பேரூராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.கடந்த ஆண்டு, மே 10ல் மாரடைப்பு ஏற்பட்டு ஹரிஹரன் இறந்தார். மகன் நினைவாக வீட்டில் முழு உருவச்சிலை வைக்க அவரது தாயார் திட்டமிட்டார்.அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பகலைக் கூடத்தில், 2.50 லட்சம் ரூபாய் செலவில், அவர் மகனின் உயரமான 5.3 அடி உயரத்தில் கற்சிலை வடிவமைக்க ஏற்பாடு செய்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இச்சிலை நிறுவப்பட்டு, அவரது நினைவு நாளில் வண்ணம் தீட்டி, நேற்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் தினமும் வழிபாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அவரது நினைவை போற்றும் வகையில் இன்று காஞ்சியில் உள்ள குழந்தை இல்லத்தில் மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *