காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை: சரத் பவார்.!!

காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணிக்கு சாத்தியமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் கூறியதாவது:மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை உபயோகிக்க கூடாது என்ற உத்தரவு குறித்து மாநில அரசு சிந்திக்க வேண்டும். பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பேச வேண்டிய நேரம் இது. ஆனால், யாரும் இதுகுறித்து பேசுவதில்லை.காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது அணி அமைவது என்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.காங்கிரஸை தவிர்த்து திரிணமூல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைத்து 2024 மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *