காங்கிரஸில் உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை.!

சேலத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தேவதாஸ் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமை சரியில்லாத காரணத்தினால், கட்சி நாளுக்கு நாள் அழிவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸில் 40 வருட சீனியாரிட்டியில் உள்ளவர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

அதனால் என்னை போன்றவர்களுக்கு, கட்சிக்காக உழைக்க வேண்டும், கட்சிக்காக செயலாற்ற வேண்டும் எனும் எண்ணம் இல்லாமல் போய்விட்டது.ஒரு தேசியக் கட்சிக்குள் ஆயிரத்தெட்டு குளறுபடிகள் இருக்கின்றன. கட்சிக்குள்ளேயே நடக்கும் உள்ளடி வேலைகள் பற்றி பலமுறை தலைமைக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விரைவில் செயலிழந்து போகும். காரணம், கட்சி பொறுப்பாளர்களே கட்சியை அழிப்பதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காமராஜர், மூப்பனார் ஆகியோருக்கு பிறகு யாரும் கட்சியை வளர்த்தெடுப்பதற்கு முன் வரவில்லை. ஆகையால் இனி என்னுடைய அனுபவம் காங்கிரஸ் கட்சிக்கு தேவையில்லை என்பதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *