கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை.!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் பத்திரிக்கை துறையில் செய்தியாளராக பணியாற்றி வந்த சிவப்பிரகாசம் ( சங்கராபுரம் பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த
அவர், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்” தமிழ் நியூஸ் டிவி சேனலில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார், இதன் பொருட்டு, செய்தியாளர் சிவப்பிரகாசம் கள்ளக்குறிச்சி மாவட்ட” பிஆர்ஓ ” அலுவலகத்தில் தனது நிறுவன குறிப்பை பதிவு செய்து, பணி செய்திடவும், உரிய சலுகைகளை பெற்றிடும் பொருட்டு ஜனவரி 2022 ல் பிஆர்ஓ அவர்களை அணுகி கடிதம் கொடுத்து முறைப்படி பேசி உள்ளார், அதற்கு பிஆர்ஓ சரவணன் அவர்கள், நியூஸ் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் புதியது மூன்று மாதம் ஆகட்டும் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார், இதனால் திரும்பி வந்து மூன்று மாதம் கழித்து திரும்பவும் பிஆர்ஓ அவர்களை சந்தித்த சிவப்பிரகாசம், தனது சட்டப்படியான உரிமையை வேண்டியுள்ளார்,

அப்பொழுது பி.ஆர்.ஓ சரவணன் அவர்கள் ஆறு மாதமாகட்டும் பார்க்கலாம் எனக்கூறி இருக்கிறார், இச்சூழலிலும் சிவப்பிரகாசம், மேற்படி பிஆர்ஓ சரவணன் அவர்களின் சகோதரர் திருச்சி மாவட்ட செய்தியாளர் அவர்கள் மூலமாகவும் வேண்டி கேட்டுள்ளார், அதற்கும் செவி சாய்க்காத பிஆர்ஓ சரவணன் அவர்கள், செய்தியாளர் அரசாங்க அடையாள அட்டை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க முடியாது என மறுத்துள்ளதுடன், தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருக்கிறார், அதன் பொருட்டு அன்று இருவருக்கும் ஆன whatsapp கால் உரையாடலில் மிகவும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் விதத்தில் அமைந்தது.

இதில் தவறான கோணத்தில் பிஆர்ஓ சரவணனின் அவர்கள் விவரித புத்தியுடன் , செய்தியாளர் சிவகப்பிரகாசம் மீது பல புனைவுகளுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளார்,

பிஆர்ஓ அவர்களின் மனைவி யார் என்று தெரியாது இவருக்கு ஆனால் அவரை அநாகரிகமாக பேசியது உள்ளிட்ட பிரிவின் கீழ் செய்தியாளர் சிவகப்பிரகாசம் மீது தனது அரசு அதிகாரத்தை பயன்படுத்தி
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரைம் நம்பர் (444/2022) அதன் பொருட்டு சிவப்பிரகாசம் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்று பணி செய்து வருகிறார்.

இச்சூழலில் 2023 ஆம் ஆண்டுக்கான பிஆர்ஓ அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் பதிவு குறித்த செயல்பாட்டில், ஜனவரி மாதத்தில் செய்தியாளர் சிவப்பிரகாசம் தனது நிறுவனத்தில் இருந்து கொடுத்த கடிதத்தை கள்ளக்குறிச்சி பிஆர்ஓ சரவணன் அவர்களிடத்திலே கொடுத்துள்ளார்,
கடிதத்தை வாங்க மறுத்து தூக்கி எறிந்த பிஆர்ஓ சரவணன் அவர்கள் நடவடிக்கையில் விரக்தி அடைந்து வந்த செய்தியாளர் சிவப்பிரகாசம்,
திரும்பவும் 13/0 1/ 2023 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட பிஆர்ஓ அலுவலகத்திற்கு சென்று பிஆர்ஓ சரவணன் அவர்களிடத்திலே பணிந்து கடிதத்தை கொடுத்து நியாயம் வேண்டி இருக்கிறார், அப்போது பிஆர்ஓ தான் அரசு அதிகாரி என்னை எதுவும் செய்ய முடியாது என சிவப்பிரகாசத்தை கீழன வார்த்தைகளை கூறி சாதி பெயரை சொல்லி இழிவு படுத்தி உடன் அவரைக் கழுத்தை நெறித்து வெளியே தள்ளி உன்னை அடியால் வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக பூகார் கொடுத்து உள்ளார்
சிவப்பிரகாசம்.

காவல் துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலைமை – கிரைம் நம்பர் 30/ 2023 இப்படிப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தக்கதாகும், பிஆர்ஓ திரு சரவணன் அவர்கள் தன்னுடைய கடமையை சரியான முறையில் செய்திருந்தார் என்றால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட்டு இருக்காது,

பிஆர்ஓ பொறுப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில், அரசுக்கும்,மாவட்ட நிர்வாகத்துக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடிய வகையில், அரசு அதிகாரி தன்னுடைய கடமையை செய்ய மறுத்து, தனது நிர்வாக கட்டுப்பாட்டில் பணியாற்றக்கூடிய செய்தியாளரை தகத முறையில் நடத்தி திட்டிய செயல் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது,

அதோடு ஐபிசி செக்சன் 166 ன் படியும், இந்திய நிர்வாகவியல் சட்டங்களின்படியும் குற்றமாகும், ஆகவே சட்ட விரோதமான முறையில் செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட பிஆர்ஓ அவர்கள் மீது உரிய சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுத்தும்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாத இருப்பதற்கு,
நடவடிக்கை எடுத்து வழிகாட்டல் செய்திடல் வேண்டும் எனவும் பத்திரிக்கை துறையினர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *