
மணலூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை மற்றும் மூங்கில்துறைபட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான திருவரங்கம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், நெடுங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமேரி மற்றும் மூங்கில்துறைபட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர்கள் வீடுகளில் திருடு போய்விட்டதாக கொடுத்த புகார் மனுவை பெற்று மணலூர்பேட்டை, மூங்கில்துறைபட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகள் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்,. இ.கா.ப அவர்கள் மாவட்டத்தில் தொடர் வீடு புகுந்து திருட்டு வழக்கு சம்மந்தமாக விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைத்து உத்திரவிட்டிருந்தார். அன்று 16.12.2022ந் தேதி காவல் ஆய்வாளர் திரு. பாபு அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் மற்றும் காவலர்கள். மேலந்தல் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்(39) த/பெ முனுசாமி என்பவரை விசாரணை செய்ததில் அவர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருட்டில் ஈடுப்பட்டது உறுதியானது, குற்றவாளி கைது செய்து அவரிடமிருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்யபட்டு. நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து விரைவாக குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.