
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் நல்லம்மாள் தனது மாமனார் பெயர் உள்ள பூர்வீக இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் தங்கவேல் உயிர் இழந்துவிட்டார் தற்போது தன் மகன் கோவிந்தராஜ் உடன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்த வரும் நிலையில்.
அவர் வசித்து வந்த கூரை வீடு மிகவும் பழமையானதாலும் தற்போது பெய்து வந்த மழையால் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்த நிலையில் தனக்கு சொந்தமான இடத்தில் வீட்டின் முன் பகுதியில் வீடு கட்ட பள்ளம் தோண்டி உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சார்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திமுகவைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கவுன்சிலரின் கணவர் பழனிசாமி உட்பட 20க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நீங்கள் வீடு கட்டக் கூடாது நீங்கள் கீழ் ஜாதி எனக்கூறி தடுத்து நிறுத்தி ஜாதி பெயர் சொல்லி தகாத முறையில் திட்டி உள்ளனர் மேலும் நீங்கள் கீழ் ஜாதி என்பதால் நாங்கள் வசிக்கும் பகுதியில் நீங்கள் வசிக்க கூடாது என கூறி வீட்டுக்கு செல்லும் மின்சார ஒயரையும், குடிநீர் குழாய் இணைப்பையும் துண்டித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நல்லம்மாள் மற்றும் அவருடைய மகன் கோவிந்தராஜ் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் இது தொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.