
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியம் பரிக்கல் டேனிமிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னண் ஒன்றிய செயலாளர் முருகன் திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர் சாந்திஇளங்கோவன் படிக்கத் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பரிசுப்பெட்டகம் விழாவினை துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வகை நோய் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியினை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.