
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காணாமல் போன தொலைபேசிகளை மீட்டு உரியரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த 6 மாதங்களாக தொலைபேசிகள் காணாமல் போனது சம்மந்தமாக வழங்கப்பட்ட CSR விபரங்கள் பெறப்பட்டு, சைபர் க்ரைம் பிரிவின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட சுமார் 9,00,000/- லட்சம் ரூபாய் மதிப்பிலான 61 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தொலைபேசி உரிமையாளர்களை நேரில் வரவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கையால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜவஹர்லால், சுப்புராயன், மாவட்ட குற்ற ஆவணகாப்பக பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சுமதி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.