
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2021-2022-ம் ஆண்டிற்கு தரிசுநிலங்கள் வாயிலாக சிறந்த முறையில் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தரிசு நிலங்கள் சாகுபடியில் சிறந்துவிளங்கும் விவசாயிகளை தேர்வு செய்து, பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

தோட்டக்கலைப்பயிரில் எளிய தொழில்நுட்பங்களை கையாண்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளை மாவட்ட அளவில் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000ம், 2-ம் பரிசாக ரூ.10,000ம், 3-ம் பரிசாக ரூ.5,000-ம் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத் துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விவசாயிகளின் முழு விபரத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி, இணையத்தின் மூலமாக மார்ச் 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை தோட்டக்கலைப்பயிர் செய்து வரும் விவசாயிகள் பயன்படுத்தி பயனடையலாம் என் மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்துள்ளனர்.