
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 மாணவர்களை ஏற்றச் சென்ற அந்த வாகனம், ஏமப்பேர் ரவுண்டானாவில் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி. பகலவன் ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தனர்.