கள்ளக்குறிச்சியில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிப்ரவரி 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 23-ம் தேதி வியாழக்கிழமை காலை 10:30 முதல் பிற்பகல் 1:30 மணி வரை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றுகிறது, இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை. வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களின் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடைய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *