களமருதூரில் பரபரப்பு; அரசு பேருந்து சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.!

களமருதூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட களமருதூர் கிராமத்தில் 18/03/23 குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கிராம மக்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கோ.கலியமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ந.ஜீவன்ராஜ், மாவட்ட பொருளாளர் ப.சிவபெருமான், உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் ஜெ.பொன்னுரங்கம், தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் கதிர்.காசிநாதன் மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதி மாணவரணி செயலாளர் சதிஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *