கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் பார்வையிட்டார்.

அங்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த செல்வகுமார், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்..வகுப்புக்குள் நுழைந்த எஸ்பி சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை செல்வகுமார் பார்வையிடும் போது, அங்கு வகுப்புகள் வழக்கம் போல நடந்து வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக எஸ்பி செல்வகுமார், அங்கு 7ஆம் வகுப்பு பாடங்கள் நடைபெற்று வந்த வகுப்பிற்குச் சென்றார். திடீரென வகுப்புக்குள் காக்கி சட்டையில் எஸ்பி வந்ததைக் கண்டு மாணவர்கள் சற்றே குழம்பினர்.

பாடம் நடத்திய எஸ்பி செல்வகுமார்அப்போது மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் எஸ்பி செல்வகுமார், அறிவியல் பாடம் நடத்தினார். அதேபோல சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகளுக்குச் சமுக அறிவியல் பாடத்தில் வரைபடத்தைப் பற்றியும் பாடம் நடத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த திடீர் ஆக்ஷனில் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural news என்ற இந்த பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மாவட்ட செய்தியாளர் சிவபெருமான்