கல்விக்கூடமாக மாறும் இந்தூர் சிறைச்சாலை; ஆர்வமுடன் பயிலும் கைதிகள்!

குற்றங்கள் செய்த காரணத்தினால் தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதிகள், சிறை விடுதலைக்குப் பிறகு வாழ்வாதாரத்தைப்பெற, அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கோணத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்கு பள்ளிக்கல்வி மற்றும் பட்டப்படிப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதனால் அங்குள்ள சிறைக் கைதிகள் பலரும் கல்வி பயில முன்வந்துள்ளனர்.இந்த ஆண்டு 253 பேர் தேர்வு எழுத உள்ளனர். 2019ல் 60க்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.சிறை கண்காணிப்பாளர் அல்கா சோன்கர், தற்போது சிறையில் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும் இதற்காக சிறைத் துறை ஒரு ஆசிரியையை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.தற்போது சிறையில் உள்ள 83 கைதிகள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வும் 253 கைதிகள் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைத் தேர்வு எழுதுவதாகவும் கூறினார்.மேலும், ‘சிறைக்கு வரும் கைதிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியும், அவர்கள் எவ்வளவு படித்திருப்பார்கள், அவர்களின் வாழ்க்கையில் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். கல்வி வழங்குவதில்சிறைத் துறை சிறப்பாக செயல்படுகிறது. எழுதப்படிக்கத் தெரியாமல் வந்த 50 கைதிகள் தற்போது பள்ளிப்படிப்பு முடித்து பட்டமும் பெற்றுள்ளனர். மேலும், இங்கு படித்து பட்டம் பெற்றவர்கள் மற்ற கைதிகளுக்கு கற்பிக்கிறார்கள்’ என்றும் தெரிவித்தார்.இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில்63 பாடங்கள் உள்ளன. இதுதவிர எம்பிஏ, எம்.காம், எல்.எல்.பி., உள்ளிட்ட பல பாடங்களை கைதிகள் படித்து, சிறையில் இருந்து விடுதலையாகி இப்போது நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது.கடந்த ஆண்டு 67 கைதிகள் சிறையில் இருந்து பட்டம் பெற்றனர். வயது கடந்தாலும் ஒரு கைதி படிக்கத் தொடங்கினால், அதைப் பார்த்து மற்ற கைதிகளும் உத்வேகம் பெறுகிறார்கள், அவர்களும் படிக்கத் தொடங்குகிறார்கள்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *