கல்யாணம் ஆன பெண்னின் வறுமையை காரணம் காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய காவலர்.!

மதுரை: திருமணமான பெண்ணை ஆசைவார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிய காவலர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு தல்லாகுளம் போலீசார் மகளீர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். சமீப காலமாக விபச்சாரத்திலும் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மசாஜ் சென்டர், ரேவ் பார்ட்டி என பலபல வழிகளில் விபச்சாரம் அரங்கேறி வருகிறது. இவற்றை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க வேண்டிய போலீசாரே பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மதுரை புதூர் ஆர்டிஓ காலனியில் உள்ள முனியாண்டி கோவில் தெருவில் வீடு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டுக்கு வெளியில் கண்காணித்து வந்தனர், அதுமட்டுமின்றி அந்த வீட்டிற்கு சென்று மறைந்திருந்தும் கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தனர். அப்போது அவ் வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது.பின்னர் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர், அப்போது அந்த வீட்டில் 37 வயதுடைய ஒரு பெண் உட்பட மூன்று பேர் இருந்தனர், அவர்கள் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடிபட்டனர். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தான் இந்த தொழிலுக்கு வந்ததாகவும் தனது சூழலைப் பயன்படுத்திக் கொண்ட இருவர் தன்னை இந்த தொழிலுக்குள் தள்ளியதாகவும் கூறி அந்தப் பெண் கதறி அழுதார்.அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த காசி என்பது தெரியவந்தது. இருவர் மீதும் விபச்சாரத்தில் தள்ளியதாக அந்த பெண் புகார் கொடுத்தார். அந்த புகாரை வைத்து போலீசார் இரண்டு நபர்களையும் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தேவேந்திரன் என்பவர் காவலர் என்பது தெரியவந்தது, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அவர் காவலராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் காசி மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினரால் மகளீர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் தல்லாகுளம் காவல் துறையினர், இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாராவது உள்ளனரா? இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் காவலர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி பெண் மிரட்டி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும், கைதான காவலர் தேவேந்திரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *