கலவரம் குறித்து 2 நாட்களுக்கு முன்பே 10 முறைக்கு மேல் மாவட்ட காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை மெத்தனம் காட்டிய அதிகாரிகள்.!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி அதே பள்ளியில் படித்து வந்த மாணவி தற்கொலை மரணம் குறித்து நீதி வேண்டி போராட்டம் நடைபெற்றது இது ஒரு கட்டத்தில் பெரும் கலவரம் மாறியது. இந்த நிலையில், கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்தை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது என ஜூலை 15ஆம் தேதியே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த கலவரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் மாவட்ட காவல்துறை இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இதனை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டதாலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த கலவரம் ஏற்பட்டதாக மாவட்ட காவல்துறைக்கு எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையை, சிறப்பு காவல் ஆய்வாளர் மாவட்ட எஸ்.பி.யிடம் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றாரா என்பன குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.இதற்கு காரணம் என்ன.? அரசியல் கட்சிகளின் குறுக்கிட அல்லது ஆட்சியாளர்களின் அலட்சியமா? என்ற பல்வேறு கேள்விகளை பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *