
ஷிவமோகா:கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை சுற்றி இன்று காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் அறிவிப்பை அடுத்து கர்நாடகாவில் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.இதையொட்டி பதற்றத்தை தணிக்கும் வகையில், ஷிவமோகாவில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மேலும் உடுப்பி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் மாவட்ட நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது.இந்த கூட்டத்தில் காவல்துறையினர், பாஜக எம்எல்ஏ ரகுபதிபட், மதத் தலைவர்கள், அரசு பியு கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural.com என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
செய்தியாளர் சிவபெருமான்