ஏ.சி. வெடித்து விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி கர்நாடகாவில் சோகம்.!

கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொணடு இருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும், இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏசி வென்ட்டில் இருந்து வாயு கசிந்ததால் மின்கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் தீயில் எரிந்து உயிரை பறித்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இறந்தவர்கள் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி டி.சந்திரகலா (38), அவர்களின் மகன் ஆத்விக் (6) மற்றும் மகள் பிரேரனா (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *