கண்டமானடி ஊராட்சியில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!

கண்டமானடி: உலக அளவில் 260 கோடி நபர்கள் (உலக மக்கள் தொகையில் 40%)இப்போது கழிவறை உள்ளிட்ட அடிப்படை இல்லாமல் இருக்கிறார்கள்.இதில், 98 கோடி பேர் சிறுவர் & சிறுமியர்கள். இவர்கள் வயல்வெளிகள், ஆறு மற்றும் குளக்கரைகள், கடற்கரைகள்,தெரு ஓரங்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் பரவும்நோய்கள் கணக்கில் அடங்கா..! இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள கழிவறை தொடர்பான 15 அமைப்புகள் 2001ல் கூடி நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிப்பறை தினம் என (World Toilet Day, November 19 ) அறிவித்தன.அதன் பிறகு ஆண்டு தோறும் உலக கழிவறை தின உச்சி மாநாடுநடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி ஊராட்சியின் சார்பில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் அரசு பள்ளி ஆசிரியர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *