
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழே காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் இவருடைய மனைவி தமிழரசி இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் குணசீலன் உயிரிழந்தார். இவரின் இந்த இறப்புச் செய்தியைக் கேட்ட மனைவி தமிழரசி சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்துள்ளார்.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு தம்பதிகள் இருவரது உடலும் ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Itís difficult to find educated people about this topic, but you seem like you know what youíre talking about! Thanks