
புதுடெல்லி: எங்கே சென்றது ரூபாய் நோட்டுகள் கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டினை ரிசவர் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து ரூ.2000 நோட்டும், புதிய வடிவிலான ரூ.500 நோட்டும் ரிசர்வ் வங்கியால் வெளியிட்டது.அண்மைக் காலமாக ரூ.2000 நோட்டுக்கள் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ரூ. 2000 நோட்டு புழக்கத்தில் குறைந்து வருவது குறித்தும், அச்சடிக்கப்பட்டு வருகிறதா என தகவல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேட்கப்பட்டதில், ரிசவர் வங்கி அளித்துள்ள பதிலில், கடந்த 31.3.2020-தேதிக்கு பின் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை. அதற்கு முன்னதாக 2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது.புழக்கத்தில் உள்ள நோட்டுக்களின் மொத்த மதிப்பில் ரூ.2000 நோட்டுகளின் பங்கு 31.3.2020 ல் 22.6 சதவீதமாக இருந்து 31.3.2021 ல் 13.8 சதவீதமாக சரிந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 – 2020ம் நிதியாண்டிலிருந்து ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.